Tuesday 16 October 2012

H1N1 வைரஸ்

H1N1 வைரஸ் பொது அறிகுறிகள் மற்றும் தற்காப்பு செயல்பாடுகள்;-

H1N1 வைரஸ் உலக மக்கள் சமுதாயத்திடையே மிகுந்த பீதியை கிளப்பிவிட்டது. இந்த உயிர்க்கொல்லி நோயின் அறிகுறிகள் சாதாரண சளிக்காய்ச்சல் அறிகுறிகளையே ஒத்திருக்கின்றன. கிழ்க்குறிப்பிட்டுள்ள சுலபமான பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்..

H1N1 காய்ச்சல் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்
சாதாரண சளி காய்ச்சல் போல் அல்லாது அதிக அளவு காய்ச்சல் – சில நோயாளிகளிடம் இந்த அறிகுறி இல்லாமலும் இருக்கலாம்.
வறட்டு இருமல்
மூக்கு அடைப்பு (அ) ஒழுகுதல்
தொண்டை புண்
உடல் வலி
குளிர் நடுக்கம்
வழக்கத்திற்கு மாறான அதிகளவு களைப்பு
குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு
முற்றிய பன்றிக்காய்ச்சலால் நிமோனியா மற்றும் நுரையீரல் செயலிழத்தல் ஏற்படலாம்.
H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
உலகெங்கும் பரவிய உயிர்கொல்லி நோயான பன்றிக்காய்ச்சல் இந்திய மன்னில் வந்தடைந்து பல உயிர்களை குடித்திருக்கிறது. இந்த நோய் வருமுன் காப்பதற்கு சில விதிமுறைகளை பின்பற்றுதல் போதுமானது. படி அளவு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் மரக்கால் அளவிற்கு நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஐந்து ஆலோசனைகளைப் பின்பற்றி பன்றிக் காய்ச்சல் தொற்று நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு H1N1 வைரஸ் தாக்கியிருப்பதாக உணர்ந்தால், கூட்டம் அதிகம் உள்ள பொது இடங்களான பள்ளி மற்றும் அலுவலகம் செல்வதை தவிர்த்து உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்.
கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கிருமி நாசினி சோப்பு கொண்டு நன்றாக நுரைக்க சோப்பிட்டு (குறைந்தபட்சம் 15 நொடிகள்) ஓடும் தண்ணீரில் கழுவவும்.
இரவில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்குவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளலாம்.
தினமும் குறைந்தபட்சம் 8 அல்லது 10 டம்ளர் அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் அது வறட்சி ஏற்படாமல் குழிவுகளில் எச்சில்/சளி ஊற செய்யும்.
இருமல் மற்றும் தும்மல் வரும்போது மெல்லிய உறிஞ்சும் தன்மை கொண்ட காகிதத்தால் வாயை மூடிக்கொள்வதன் மூலம் வைரஸ் தொற்றுக் கிருமிகள் யாருக்கும் பரவாமல் தடுக்கலாம்.
கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை கைகளால் தொடுவதை தவிற்பதன் முலம் பரவுவதை தவிற்கலாம்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ள (அ) பாதிக்கப்பட்ட நபரை அடிக்கடி தொடர்பு கொண்டு கவணித்தல் வேண்டும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் / உடலை வலிமையுடன் பேணவும் / முழுதாணியங்கள், பல்வகை வண்ணக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் நிறைந்த பழங்களை உண்ணவும்.

No comments:

Post a Comment