Tuesday 16 October 2012

தேனீ கொட்டினால்



1. மாங்காய் காம்பிலிருந்து வழியும் பாலை தேனி கொட்டிய இடத்தில் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும்.

2. சிறிது சுண்ணாம்புடன் புளி சேர்த்து தேனீ கொட்டிய இடத்தில் போட்டால் வலி நின்று விடும்.

நாய் கடி விஷம் குறைய

1. சுக்கு, மிளகு, வசம்பு, முருங்கை ஈர்க்கு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கஷாயம் செய்து குடித்து வந்தால் வாந்தி நின்று நாய் கடி விஷம் குறையும்.

2. கற்றாழை மடல் 10 கிராம், உப்பு 10 கிராம் இரண்டையும் இடித்து கடிவாயில் வைத்து நாளொரு வேளை வீதம் 3 நாள்கள் கட்டி வந்தால் நாய் கடி விஷம் குறையும்.

பூரான் கடி விஷம் குறைய

1. 50 கிராம் ஊமத்தை வேரை சிறு சிறு வில்லையாக அறுத்தெடுத்து அதை 200 மில்லி நல்லெண்ணெயில் போட்டு சூரிய ஒளியில் வைத்து எடுத்து உடல் முழுவதும் தேய்த்து வந்தால் பூரான் கடி விஷம் குறையும். இந்த எண்ணெயைத் தினசரி சூரிய ஒளியில் வைக்கவேண்டும்.

2. 30 கிராம் அளவு மிளகை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு வெற்றிலை சாறை விட்டு 4 மணி நேரம் ஊற வைத்து பிறகு அதை எடுத்து காய வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர வேண்டும். இந்த மருந்தை 3 நாட்கள் சாப்பிட்டு பிறகு 3 நாட்கள் சாப்பிடாமல் பத்தியம் இருந்து மீண்டும் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரான் கடித்த விஷம் குறையும்.
குறிப்பு: இந்த மருந்தை சாப்பிடும் போது புளி இல்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்.

3. குப்பை மேனி இலை, உப்பு இவைகளை நன்றாக மை போல அரைத்து உடல் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்துவர வலி குறையும்.

தேள்கடி விஷம் குறைய

1. 20 மிளகை எடுத்து தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும்.

2. தூள் செய்த உப்பு இரண்டு தேக்கரண்டியுடன் மயில் துத்தத்தையும் தூள் செய்து கலந்து தேள் கொட்டிய வாயில் வைத்து அழுந்தக் கட்டினால் தேள் கடி விஷம் குறையும்.

No comments:

Post a Comment