Wednesday 24 October 2012

டெங்கு

டெங்கு காய்ச்சலுக்கு......டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டவுடன்,பப்பாளி மரத்தின் இலையை பிடுங்கி, நன்றாக கழுவிய பின், ஒரு இலையை மட்டும் கசக்கி பிழிய வேண்டும்.அதில் இருந்து கிடைக்கும் சாறை நன்றாக வடிகட்டியபின் அப்படியேகுடிக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி சாறு ஒரு இலையில் இருந்து கிடைக்கும். இவ்வாறு தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் சிகப்பு ரத்த, நோய் எதிர்ப்பு சகிதி கிடைக்கும். இரண்டு நாளில் குணம் அடைந்து விடலாம். ஒரு மூன்று நாட்களுக்கு குடிக்கலாம்.நான் கேள்வி பட்டவரை டெங்கு காய்ச்சலுக்கு பட்டுக்கோட்டை மற்றும் ஆவுடையார் கோவில் பகுதி மக்கள் இவ்வாறு கண்டு பிடித்துள்ளார்கள்.காலையில் வெறும் வயிற்றில் ஒரு பப்பாளி இலையுடன் சிறிது வேப்பிலைகளை கலந்து அப்படியே பிழிந்து சாறு எடுத்து குடிக்க வேண்டும்.ஒரு இரண்டு நாட்கள் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பித்துவிடலாம். டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன்னும் இவ்வாறு ஒரு இரண்டு நாட்கள் குடித்து வந்தால் இந்த ஆள் கொல்லி நோயை விரட்டி விடலாம்.


No comments:

Post a Comment