Saturday 20 October 2012

முதுகுவலி ஒரு பார்வை

முதுகுவலி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தால் வருகிறது. வாகனம் ஓட்டுபவர்களுக்கு, கணினியில் நீண்ட நேரம் அமர்ந்து பணியாற்றுபவர்களுக்கு, அதிக எடைகளைத் தூக்கி பணியாற்றுபவர்களுக்கு, குதிகால் செருப்பு அணிபவர்களுக்கு என்று பல்வேறு பட்ட நிலைகளில் உள்ளவர்களுக்கு முதுகுவலி ஏற்படுகிறது.
பொதுவாக முதுகுவலி ஏற்பட்டதும் அதற்கு சிகிச்சை செய்வதை விட, அது ஏன் ஏற்பட்டது என்பதை கண்டறிந்து அதனை மாற்றுவதுதான் சிறந்த வழியாகும். எந்த மாற்றத்திற்குப் பிறகும் முதுகுவலி தொடர்ந்து கொண்டே இருந்தால் சிகிச்சை பெறுவது நல்லது.

முதுகுவலி உள்ளவர்கள் எடை அதிகமான பொருட்கள் எதையும் தூக்குவதை தவிர்க்க வேண்டும். உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரிப்பதாலும் சிலருக்கு முதுகுவலி ஏற்படுகிறது.திடீரென முதுகுவலி அதிகரிக்கும் போது நாம் வீட்டில் மேற்கொள்ளக் கூடிய சில சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.

ஒரு பாட்டிலில் சுடுநீரை ஊற்றி மூடி அதனை வலி உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுக்கலாம்.தீராத முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வலி குறையும்.முதுகுவலிக்கு பூண்டு நல்ல நிவாரணமாக அமையும். காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டை சாப்பிட்டால் முதுகுவலி போன இடம் தெரியாது.

மேலும், பூண்டை ஏதேனும் ஒரு எண்ணெயில் வதக்கி அந்த எண்ணெயை முதுகில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

No comments:

Post a Comment