கண்ணும் & கணினியும் ( ஏற்படும் நோய்கள்)அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல் (DRY EYE SYNDROME). இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது. அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும்.என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும்அபாயம் உண்டு.கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும். பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள். கணினியில் குளிரூட்டப்பட்டஅறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில்நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம்.கண் உலர்தலிலிருந்துதப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான். கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப்பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.
Saturday, 10 November 2012
6 தவறுகள்
அவசியம் தவிர்க்க வேண்டிய 6 தவறுகள்
நம் உடலுக்கு ஒரு நல்ல குணம் உண்டு. எப்போதுமே எச்சரிக்கை கொடுக்காமல் திடீர் என்று பிரேக் டவுன் ஆகி அது தவிக்கவிடுவது இல்லை. மாறாக நம்முடைய அலட்சியமும் சலிப்பும் அவநம்பிக்கையும்தான் பல உபாதைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன.நமது உடல்நலம் குறித்த விஷயத்தில் நாம் முக்கியமாக 6 தவறுகளைச் செய்கிறோம். அவை
1நோய் அறிகுறிகளைப் புறக்கணிப்பது
2 சுய மருத்துவம
்3 பாதி வைத்தியம்
4 மருத்துவரிடம் பேசத் தயங்குதல
்5 மருத்துவ ஆவணங்களைப் பராமரிக்கத் தவறுதல்
6 மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருத்தல்
தக்காளி
ஒரு குட் நியூஸ்! தக்காளி அதிகம் சாப்பிட்டால் வாதம், பக்கவாதத்திற்குடாட்டா காட்டலாம். ‘ரத்தத்தில் லைகோபீன் என்கிற வேதிப்பொருள் குறைவாக இருப்பவர்கள் தான் அதிகம் வாத நோயால் பாதிக்கப் படுகிறார்கள். தக்காளி, சிகப்புகுடமிளகாய் மற்றும் தர்பூசணியில் இருக்கும் ‘லைகோபீன்‘ என்கிற வேதிப்பொருள் வாதநோயைத் தடுக்கிறது. எவ்வளவு அதிகமாக தக்காளி சாப்பிடுகிறோமோ,அங்கே வாதம் பாதம் வைக்காது!’ என்று கண்டுபிடித்திருக்கிறார் கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஜவ்னிகார்ப்பி.பங்காளிக்கு ஒரு கிலோ தக்காளி பார்சேல்!
பல் சொத்தை!!!
பல் சொத்தை ஒரு பார்வை
பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.சரி பல் சொத்தை பற்றி நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷைவாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.பல் தேய்ப்பது மட்டும் முக்கியமல்ல.. வாயை நன்கு கொப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இரவில் படுக்கச் செல்லும் முன்பு உப்புத் தண்ணீரால் வாயை கொப்பளிப்பது மிகவும் நல்லது.ஈறு பிரச்சினை ஏற்படாமல்இருக்க, ஈறுகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும்ரத்த ஓட்டம் குறையும் போதுதான்பிரச்சினை ஏற்படுகிறது. காய்கறிகள், பழங்களை நன்கு கடித்து மென்று சாப்பிடுவது ஈறுப்பகுதிகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும்.அறுவை சிகிச்சை செய்வதற்குக்கூட சொத்தைப் பல் இருப்பவர்களுக்கு சில அறுவை சிகிச்சைகளைசெய்ய மாட்டார்கள்.சொத்தைப் பல்லை நீக்கிவிட்டுத்தான் அறுவை சிகிச்சைசெய்வார்கள்.நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதிக்கு இருக்கும் அனைத்து விஷயங்களும் சொத்தைப் பல்லுக்கும் பொருந்தும்.சாப்பிடும் போது நன்கு மென்று திண்பதால் உணவில் அதிகளவில் உமிழ்நீர் சேர்ந்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. அதேப்போல சாப்பிட்டதும் வாயை நல்ல தண்ணீரில் கொப்பளித்துஅந்த நீரை துப்பிவிடக்கூடாது. முழுங்கிவிட வேண்டும். இதுவும் செரிமானத்திற்கு உதவி செய்யும்.அந்த காலத்தில் சாப்பிட்டு முடிந்ததும் வெற்றிலை பாக்கு போடுவார்கள்.வெற்றிலைக்குசெரிமானத் திறனும், சளியைப் போக்கும் சக்தியும் உள்ளது. வெற்றிலைப் பாக்குப் போட்டால் அந்த சாறையும் துப்பிவிடக்கூடாது.தாய், தந்தையரில் இருவருக்கோ அல்லது யாரேனும் ஒருவருக்கோ பல் சொத்தை இருந்தால், அவர்களது பிள்ளைக்கும் பல் சொத்தை கண்டிப்பாக வரும். அதனை தவிர்க்க முடியாது. அப்பாவை விட, அம்மாவிற்கு பல் சொத்தை இருந்தால் குழந்தைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளன.பல்சொத்தைக்கு சர்வாங்காசனம், சிரசாசனம்செய்தால் பிரச்சினை குறையும். சிரசாசனம் செய்யும் போது பல் சொத்தை மாறுவது கண்கூடாகத்தெரியும். பொதுவாக பற்களை பிடுங்கக் கூடாது என்பார்கள். கீழ்ப் பல்லைப் புடுங்கினாலும் மேல் பல்லைப் புடுங்கவேக்கூடாது. ஏன் எனில் மேல் பல், நேரடியாக மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதாகும்.தற்போது சொத்தைப் பற்களின் வேர்களுக்கு சிகிச்சை அளித்து சொத்தையை சரி செய்யும் முறை வந்துள்ளது. அதில்லாமல் ஒரு பல்லைப் புடுங்கிவிட்டால் அந்த இடத்தில் செயற்கைப் பல்பொருத்துவதும் நல்லது. ஏன் எனில் கீழ்ப்பல்லைப் பிடுங்கிவிட்டால் அதனால் மேல் பல் இறங்கும் நிலை ஏற்படும். இதனைத் தவிர்க்கவே செயற்கைப் பல் பொருத்தப்படுகிறது.பற்களுக்கு பச்சைக் காய்கறிகளை அதாவது கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றைக் கடித்து மென்று திண்பதால் நல்ல பயிற்சி கிடைக்கும்.ஆயில் புல்லிங் பற்றி சொல்லுங்கள்...ஆயில் புல்லிங் என்பதும் பற்களுக்கு நன்மை தரக்கூடியதுதான். வெறும் நல்லெண்ணையில் கூடசெய்யலாம். ஆனால் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே ஆயில் புல்லிங் செய்வது மிகவும் நல்லது.
முதுகு தண்டுவடம்!!!
முதுகுத் தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து 'ஸ்பைனல் கேர் இந்தியா’ என்ற அமைப்பினைத் தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. முதுகுத் தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் தரமான மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வுப் பயிற்சி ஆலோசனைகளைப் பெற 18004251210 என்ற எண்ணில் இவர்களைத் தொடர்புகொள்ளலாம
சிகரெட்!!!
காருக்குள் உட்கார்ந்து ஹாயாக தம் அடிக்கும் பார்ட்டியா நீங்கள்? விட்டுடுங்க சார். வெளியே சிகரெட் இழுப்பதைவிட, காருக்குள் அமர்ந்து புகையை இழுக்கும்போது அதிக அளவு நச்சுப் பொருட்கள் உடலுக்குள் செல்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார் அபர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷான் செம்பிள். ஷானின் ஆய்வு சொல்லும் இன்னோர் அபாயகரமான செய்தி, இப்படி ஒருவர் சிகரெட் அடிக்கும்போது காரில் கூட உட்கார்ந்து இருப்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது.குறிப்பாக, குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்; ஏனென்றால் குழந்தைகள் ஒரு நிமிடத்தில் அதிக தடவை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுபவர்கள். மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு கட்டமைப்பும் முழுமையாக வளர்ச்சிய டைந்திருக்காது'' என்கிறார் ஷான்.
அந்தி மந்தாரை
அந்தரத்தாமரையின் மருத்துவ குணங்கள்:-
இது வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டி வர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டி வர வெளி மூலம், ஆசனக் குத்தல் ஆகியவை தீரும்.25 மி.லி. இலைச்சாற்றை சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாட்கள் கொடுக்க மார்பிலும் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.அந்தரத்தாமரையிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூல மூளை அகலும்.இதன் இலைச்சாறு அரை லிட்டர், நல்லெண்ணைய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத்தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள் சாம்பிராணி வகைக்கு 10 கிராம் போடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத்தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.