காருக்குள் உட்கார்ந்து ஹாயாக தம் அடிக்கும் பார்ட்டியா நீங்கள்? விட்டுடுங்க சார். வெளியே சிகரெட் இழுப்பதைவிட, காருக்குள் அமர்ந்து புகையை இழுக்கும்போது அதிக அளவு நச்சுப் பொருட்கள் உடலுக்குள் செல்கிறது என்று கண்டறிந்து இருக்கிறார் அபர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஷான் செம்பிள். ஷானின் ஆய்வு சொல்லும் இன்னோர் அபாயகரமான செய்தி, இப்படி ஒருவர் சிகரெட் அடிக்கும்போது காரில் கூட உட்கார்ந்து இருப்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பது.குறிப்பாக, குழந்தைகள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்; ஏனென்றால் குழந்தைகள் ஒரு நிமிடத்தில் அதிக தடவை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுபவர்கள். மேலும் அவர்களது நோய் எதிர்ப்பு கட்டமைப்பும் முழுமையாக வளர்ச்சிய டைந்திருக்காது'' என்கிறார் ஷான்.
No comments:
Post a Comment