Saturday, 10 November 2012

ரோஜாப்பூ!!!

ரோஜா பூவின் மருத்துவ குணங்கள்:-

ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும், இதயத்திற்கு வலுவூட்டும்.ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலர்ச்சிக்கல் விலகும்.
நீர் கட்டு உடையும், மூலச்சூடு தணியும்..

ரோஜா மொக்குகளில் ஒரு கையளவு கொண்டு வந்து ஆய்ந்து, அதை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.இந்த விதமாக மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும். தேவையானால் மேலும் மூன்று நாட்கள் கொடுக்க பூரணமாகக் குணமாகும்

்.பித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்திநெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி, ருசிக்காக தேவையான அளவுசர்கரை சேர்த்துக் காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும், கலக்கிக் குடித்து விட வேண்டும், இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.
இந்தச் சமயத்தில் பித்த்தை உற்பத்தி செய்யும் பண்டங்களை சேர்க்க க்கூடாது.

ஆய்ந்து எடுத்த ரோஜா இதழ்கள், கால் கிலோ எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். முதல் காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். காலையில் வெய்லில் வைத்து மாலையில் எடுத்து வைத்து விட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும்..ஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, காட்டுச் சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவுஅம்மியில் வைத்து அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.பூவைக் குடிநீராக்கிக் கொப்பளிக்க வாய்புண் சீராகும். குடிநீராக வைத்து ரணங்களைக் கழுவி வரச் சதை வளர்வது ஆறும். ரோஜா பூவிலிருந்து பன்னீர் தயாரிக்கப்படுகிறது.ரோஜாப்பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீருடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும


Wednesday, 24 October 2012

டெங்கு

டெங்கு காய்ச்சலுக்கு......டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்பட்டவுடன்,பப்பாளி மரத்தின் இலையை பிடுங்கி, நன்றாக கழுவிய பின், ஒரு இலையை மட்டும் கசக்கி பிழிய வேண்டும்.அதில் இருந்து கிடைக்கும் சாறை நன்றாக வடிகட்டியபின் அப்படியேகுடிக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி சாறு ஒரு இலையில் இருந்து கிடைக்கும். இவ்வாறு தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் சிகப்பு ரத்த, நோய் எதிர்ப்பு சகிதி கிடைக்கும். இரண்டு நாளில் குணம் அடைந்து விடலாம். ஒரு மூன்று நாட்களுக்கு குடிக்கலாம்.நான் கேள்வி பட்டவரை டெங்கு காய்ச்சலுக்கு பட்டுக்கோட்டை மற்றும் ஆவுடையார் கோவில் பகுதி மக்கள் இவ்வாறு கண்டு பிடித்துள்ளார்கள்.காலையில் வெறும் வயிற்றில் ஒரு பப்பாளி இலையுடன் சிறிது வேப்பிலைகளை கலந்து அப்படியே பிழிந்து சாறு எடுத்து குடிக்க வேண்டும்.ஒரு இரண்டு நாட்கள் குடித்து வந்தால் டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பித்துவிடலாம். டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன்னும் இவ்வாறு ஒரு இரண்டு நாட்கள் குடித்து வந்தால் இந்த ஆள் கொல்லி நோயை விரட்டி விடலாம்.


Sunday, 21 October 2012

சிறிய மிட்டாய் தொடங்கி ஸ்டார் ஹோட்டல்களில் விற்பனை செய்யப்படும் சிக்கன் வரை
கண்ணைக் கவரும் கலராய் இருந்தால்தான் கவனம் ஈர்க்கிறது. அந்த நிறத்தின் அழகில்
மயங்கி அதை வாங்கி உட்கொள்பவருக்கு உடல்ரீதியான குடல் ரீதியான பாதிப்புகள்
ஏற்படுகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள்
பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை
உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இந்த
ரசாயனங்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும்
பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.

இவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கே பேராபத்தாக
மாறிவிடும் அபாயம் உள்ளது. ரசாயனங்களினால் ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி,
நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு,
வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி,
மூளையில் கட்டி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை
பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மீன் வறுவல்கள் பார்க்கும்
போதே சாப்பிட வேண்டும் என்று ஆசையை ஏற்படுத்தும் சிவப்பு நிறத்தில்
தருகின்றனர். இந்த சிவப்பு நிறத்துக்காக அளவுக்கதிகமாக கேசரி பவுடர்
சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் பஜ்ஜி, போண்டாவிலும் சேர்த்து நிறம்
உண்டாக்கப்படுகிறது.

இப்படி ரசாயனம் சேர்க்கப்பட்ட சிக்கன் 65, மீன் வறுவல் சாப்பிடுவது பணம்
கொடுத்து நாமே நோயை வாங்குவதாகும். இவைகளை சாப்பிட்டால் குடல் கேன்சர்,
சோரியாசிஸ் ஆஸ்துமா, வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நாளடைவில் உயிருக்கும்
வேட்டு வைத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல் கேக்குகளின் கிரீம்களில் உள்ள ரசாயனங்கள் பச்சிளம் குழந்தைகளின்
உடல்நலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்கள் குளிர்பானங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்
என்பது மகப்போறு மருத்துவர்களின் அறிவுரையாகும். ஏனெனில் கர்ப்ப காலத்தில்
குளிர்பானங்களை குடிப்பதால் அதில் உள்ள ரசாயனங்கள் கருவில் உள்ள குழந்தைகளை
பாதிக்கின்றன. இதனால் பிறக்கும் குழந்தை, ஆட்டிசம் மற்றும் மளவளர்ச்சி
குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே கண்ணைக் கவரும் நிறங்கள் கொண்டு உணவுகள் மீதான கவனத்தை குறைந்து
இயற்கையான உணவுகளை உண்பதற்கு ஆர்வம் காட்டவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்
நிபுணர்கள்.
அலுவலக வேலையோ வீட்டு வேலையோ அழுத்தம் இல்லாமல் இருக்கவேண்டும் ஆனால்
இன்றைக்கு இருக்கும் பணிச்சுமை பெண்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இது
தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பணிக்குச் செல்லும் 70 சதவிகித பெண்கள்
மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 40 சதவிகித பெண்கள் இதயம்
தொடர்பான நோயினால் பாதிப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதற்குக் காரணம்
பெண்களுக்கு ஏற்படும் பணிச்சுமைதான். பணியில் அழுத்தம் உள்ள பெண்களுக்கு
மாரடைப்பு, இதயஅடைப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் அதிகம்
என்றும் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பெண்கள் மருத்துவமனையின் சார்பில் இந்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு 17115 பெண்கள் எடுத்துக்
கொள்ளப்பட்டனர். இவர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இவர்களிடம் வேலைச்சுமை அழுத்தம், வேலை பாதுகாப்பின்மை, பணியில் ஏற்படும்
டார்ச்சர் பற்றி தொடர்ந்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. இவர்கள்
அளித்த பதிலின் அடிப்படையில், அதிக வேலைச்சுமை அழுத்தமுடைய பெண்களுக்கு,
மாரடைப்பு மற்றும் தமனிகளில் இரத்த அடைப்பு பாதிப்பிற்கான வாய்ப்பு 40 சதவீதம்
இருந்து தெரிய வந்தது.

வேலைசுமை உள்ள பெண்களின் இதய ஆரோக்கியம் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட
காலத்தில் பாதிக்கப்படுகிறது என்று இந்த ஆய்வினை மேற்கொண்ட மூத்த ஆய்வாளர்
மிச்செல்லி ஆல்பர்ட் கூறியுள்ளார்.

ஒருவரின் உடல் ஆரோக்கியத்தில் வேலைச்சுமை சாதக, பாதக நிலைகளை ஏற்படுத்துகிறது.
சுமை நிறைந்த வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வேலைச்சுமை மன
ரீதியிலான அழுத்தத்தை கொடுக்கும் வேலையில் தனிப்பட்டவரின் திறனை முடிவு
எடுக்கும் வாய்ப்பை குறைக்கிறது. அதேசமயம் இது நேரடியாக பெண்களின் மாரடைப்பு,
பக்க வாதம், இறப்புக்கு வழிவகுப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நினைவுத்திறன் குறைபாடு என்பது இன்றைக்கு பெரும்பாலான முதியவர்களை
பாதிக்கிறது. அல்சீமர் எனப்படும் இந்தநோயை தடுக்க இதயத்தை பத்திரமாக
பாதுகாக்கவேண்டும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மறதி நோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று
வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில்
இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்
என்கிறது.

யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும்
மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர்
அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு மேற்கொண்டன.

மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க
வேண்டியது அவசியம்.

உடலில் நல்ல கொழுப்புகள் அதிகம் இருந்தால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
அதேசமயம் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி அவை ரத்தநாளங்களில் படிந்து இதயநோய்களை
ஏற்படுத்துகின்றன. இதனால் நோய் குறித்த எண்ணமே மூளையை பாதிக்கிறது. எனவே
ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை பாதுகாப்பதோடு மூளையையும்
ஆரோக்கியமாக வைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.

பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம்தான். இதே
நினைப்பு மூளைச்செயல்பாட்டையும் பாதிக்கும். இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக
இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி என்கின்றனர்
நிபுணர்கள்.
ஹோம் மேக்கர் எனப்படும் இல்லத்தரசிகளை விட அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லும்
பெண்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சுய சம்பாத்யம், அலுவலக நட்பு வட்டாரங்கள்
என்பதையும் தாண்டி ஆரோக்கியம் அதிகரிக்கிறதாம்.

இது தொடர்பாக அக்ரோன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் தலைமையில் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் அட்ரியான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில்
பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள், வேலையை விட்டவர்கள்,
பகுதிநேரமாக வேலை பார்ப்பவர்களை விட முழுநேரமும் வேலைக்குப் போகும் பெண்களின்
ஆரோக்கியம் நல்ல முறையில் இருந்ததாம். வீட்டில் இருக்கும் பெண்களை விட அவர்கள்
மிகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டனராம்.

குழந்தை பிறந்து 6 மாதத்தில் வேலைக்குத் திரும்பும் இளம் தாய்மார்கள் மிகவும்
ஆரோக்கியமாக இருக்கின்றனராம். இந்த பெண்கள் 40 வயதாகும்போது அவர்களின்
ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் இன்றி சுறுசுறுப்பாக இருக்கின்றனர்
என்கின்றனர் நிபுணர்கள்.

வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து ஆரோக்கியத்தையும்
தக்கவைத்துக் கொண்டுள்ளனர் பெண்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. ஆனால்
அதை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான செயல். பொதுவாக
புகைப்பிடிப்பவர்களுக்கு, புகைபிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளும்
தெரியும், அதைவிட நிறுத்துவது கடினம் என்பதும் நன்றாக தெரியும். ஏனெனில்
அதற்கு அடிமை ஆகிவிட்டால் அதை நிறுத்தும் போது பல கஷ்டங்களை அனுபவிக்க
நேரிடும். இவ்வாறு அதற்கு அடிமை ஆனவர்கள் நிறுத்த நினைக்கும் போது புதிதாக ஒரு
சில பழக்கத்தை மேற்கொண்டால், ஈஸியாக அதனை நிறுத்தலாம். அது எப்படியென்று
படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

*புகைப்பழக்கத்தை நிறுத்த சில டிப்ஸ்...*

1. சிகரெட்டை நிறுத்த நினைப்பவர்களுக்கு உடலுக்கு தீங்கு விளைவிக்காத சிகரெட்
என்று ஒன்று உள்ளது. எப்படியென்றால் அந்த சிகரெட்டில் புகையிலை அல்லது
நிக்கோட்டினுக்கு பதிலாக, ஒரு சில ஃப்ளேவரான புதினா அல்லது ஆசையைக்
கட்டுப்படுத்தும் மெத்தனால் என்பவை இருக்கின்றன. இதனால் உடலானது ஆரோக்கியமாக
இருப்பதோடு, மனநிறைவு அடையும் வகையில் இருக்கும்.

2. சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மெல்லலாம். அதற்காக அதிக நேரம் மென்றாலும்
உடலுக்கு ஆபத்தானது. ஆகவே இனிப்பு குறைவாக இருக்கும் புதினா சுவையாலான
சூயிங்கம்-ஐ வாயில் போட்டு மென்றால், சிறிது சுயக்கட்டுப்பாடானது மனதில்
இருக்கும்.

3. புதினாவானது உடலுக்கு மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு சூயிங்கம் போடும் போது,
இந்த புதினா ஃப்ளேவரான சூயிங்கம் அல்லது சாக்லேட்டை சாப்பிடலாம்.

4. டார்க் சாக்லேட் மிகவும் சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட.
எப்போது புகைப்பழக்கத்தை விட வேண்டும் என்று நினைக்கும் போது இந்த சாக்லேட்டை
சாப்பிட்டால் பசியானது அதிகரிப்பதோடு, வயிறு முழுவதும் உண்டுவிடுவர். மேலும்
அந்த சாக்லேடில் உள்ள கோக்கோவானது, அதன் சுவையால் சிகரெட்டை மறக்கச்
செய்துவிடும்.

5. நிறைய பேர் மிகவும் பிடித்த டூத் பிக்கை மெல்லுவார்கள். இது மிகவும்
ஆரோக்கியமானது. அந்த டூத் பிக்கானது மூங்கில் அல்லது பிர்ச் மரத்தில் இருந்து
செய்யப்படுவது. இதனை நீண்ட நேரம் மெல்லுவதால் பற்களில் உள்ள அழுக்கானது
போய்விடும். இந்த டூத் பிக்கானது நிறைய ஃப்ளேவரில் உள்ளது.

6. சோம்பு, நட்ஸ் போன்றவற்றை வாயில் போட்டு மெல்லுதல் மிகவும் சிறந்த,
ஆரோக்கியமான ஒன்று. நட்ஸில் பாதாம் கொட்டையை வாயில் போட்டு மென்றால் உடலுக்கு
மிகவும் சிறந்தது.

7. எப்போதெல்லாம் புகைபிடிக்க வேண்டும் என்பது போல் தோன்றுகிறதொ,
அப்போதெல்லாம் 2-3 வாழைப்பழங்களை சாப்பிடலாம். இது புகைப்பழக்கத்தை நிறுத்த
ஒரு சிறந்த வழி.

இவற்றையெல்லாம் செய்தால் புகைப்பழக்கம் போவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.